மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கித்தாரி தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.