Date:

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர், அவரோடு விளையாட முற்பட வேண்டாம் என எதிரணியினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

நாட்டுக்கு தீங்கு, இழப்பு ஏற்படுத்தியது ரணிலோ, ராஜபக்ஷவோ என்பது எமக்கு முக்கியம் அல்ல. எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை செய்யும்.

ஒரு சில வாரங்களில் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் என நினைக்கின்றோம்.

மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினையும் தீர்க்கப்படும். வடக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். அவர்கள் பற்றியும் எமக்கு தெரியும். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...

தபால் ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும்...