நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய நான்கு நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரை முன்வைத்து இலங்கை வைத்திய சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் வரையறைகளை மேலும் மேற்பார்வையின் கீழ் சட்டதிட்டங்களைக் கடுமையாக்குதல், முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய குழுக்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்தல் கொரோனா பரவலையும் வீதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பரிசோதனைகளை முன்னெடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவ சங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரயாணத்தடை நீக்கப்பட்டவுடன் இன்னுமொரு கொரோனா அலை உருவாவதற்கான கடுமையான எச்சரிக்கை நிலை இருப்பதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கு முன்னா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.