முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியுள்ளதால் இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.