பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வௌ்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு புதிய சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் என்று அவர் கூறினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.