நாட்டில் எட்டு இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவற்றை விசாரணைசெய்து தீர்ப்பு வழங்குவதற்கு 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மதவாச்சியில் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
நீதிமன்ற வழக்குகள் தாமதமின்றி நிறைவடைவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். நாட்டில் 08 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவற்றை விசாரணை செய்து தீhப்பு வழங்குவதற்கு வெறும் 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு இது பிரதான காரணமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.