முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (22) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது