வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி திருவிழா 21.08.2025 அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் கிரியைகளும் நடைபெற்றன.
பின்னர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக தங்க இடப வாகனத்தில் உள் வீதி வலம் வந்து, வெளி வீதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இத்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் இஷ்ட சித்திகளைப் பெற்று மகிழ்ந்தனர். 25 நாட்கள் நடைபெறும் இந்த மஹோற்சவம் 29.07.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 22.08.2025 அன்று தீர்த்தோற்சவம் மற்றும் மாலையில் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.