பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.