Date:

சஷீந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரச நிலத்துக்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத...

விமான விபத்தில் காயமடைந்த அஜித் பவார் காலமானார்

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்...

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்...