சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்
திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின் க.பொ.த. (சாதராண தரப்) பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றமைக்காக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவினால் பணப்பரிசு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சபாநாயகருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிப் பாராளுமன்ற செயலாளர் நாயகம், படைக்கலச் சேவிதர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.