மொனராகலை – வெலியாய பகுதியில் தனியார் பேருந்தொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.