மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T – 56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, 45 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (15) கைதாகியுள்ளார்.
சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அவரிடம் இருந்து T – 56 ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் மகசின் மற்றும் 14 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மகசின், 2.5 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.