ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார் என்று தற்போதைய ஆளும் தரப்பின் அப்போதைய (JVP) தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இன்று, ஆளும் தரப்பினர் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா செய்கையில் ஈடுபட சட்ட ரீதியான அனுமதிகளை வழங்கியுள்ளனர். இன்று 7 திட்டங்களின் கீழ் 64 ஏக்கர் கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளும் தரப்பின் கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கி அதனை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
– எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச –