கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சீனக்கடலை மையமாகக் கொண்டு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலு கொண்டது. அதற்கு போடூல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக காற்றுடன் ஹீவாலியன், பிங்டூங், யூன்லின் போன்ற மாகாணங்களைத் தாக்கியது.
இதனால் அங்குள்ள நகரங்கள் புயலுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின.
அதிகமான மழையின் காரணமான தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் புயலில் சிக்கி மின் கம்பங்கள், மரங்கள் போன்றன வேரோடு சாய்ந்தன.
இதன் காரணமாக அப் பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப் புயலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.