தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் குளிரூட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் குஷ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 36 வயதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.