Date:

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்பைப் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கதிர்காமத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, முதற்கட்டத்தில் 40 செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்புகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸ் சாரதிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கவும், தேவையான எச்சரிக்கை சமிஞ்சைகளை வழங்கவும் இந்த கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தூரப் பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்கள் அனைத்திற்கும் விரைவில் செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் முழுமையாகப் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது...

டில்வினை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ்...

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில்...