சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்றரை வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளை, சியம்பலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மகளை கவட்டியில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது முன்னால் பயணித்த கார் மீது மோதியுள்ளது. இதன் போது சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் சிகிரியா பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும், அவரை அழைத்து வர சென்றுக்கொண்டிருந்த போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.