வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் ‘எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7:20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குத் திரும்பும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு, மாலை 3:55 மணிக்கு பதுளையை அடையும்.
திரும்பவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1:45 மணிக்கு பதுளையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 7:20 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
350 இருக்கைகள் கொண்ட இந்த ரயில், இலங்கையின் மலைநாட்டு பகுதியின் அழகிய பயண அனுபவத்தை வழங்குவதற்காகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.