இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் பதிவு செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், அதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.