கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.