2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (10) இடம்பெறவுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகளும் நேற்று (09) மேற்கொள்ளப்பட்டன.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 307,951 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 10.45 மணிக்கு முடிவடையவுள்ளது.
அதன் பின்னர், அரை மணி நேர இடைவேளை விடப்பட்டு, காலை 11.15 மணிக்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படவுள்ளது.
இந்த வினாத்தாளுக்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படவுள்ளதுடன், அதன்படி, வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிவடையவுள்ளது.
அதன்படி, 09:30 மணிக்கு ஆரம்பமாகும் பரீட்சை பிற்பகல் 12:15 மணிக்கு முடிவடையவுள்ளது.
இதற்கிடையில், நேற்று புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி, இன்று இடம்பெறும் புலமைப்பரிசில் பரீட்சையின் போது ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்பட்டால், 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்றும், அதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
காலை 09:30 மணிக்கு தொடங்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காலை 08:30 மணிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்