பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு தீப்பிடித்ததில் பாதிப்புக்குள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.