அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று (09 ) காலை சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் குறித்த வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்து, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.