“நச்சு கலந்திருப்பதாக சொல்லப்படும் சேதனப் பசளையைக் கொண்ட சீன கப்பலை இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் அந்த கப்பலிலுள்ள பசளை பரிசோதனைக்குட்படுத்தப்படவும் மாட்டாது. அதற்குரிய கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது. ”
இவ்வாறு கமத்தொழில் அமைச்ச மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் மாநாட்டில் சற்றுமுன் தெரிவித்தாா்.
அந்த கப்பலை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அதன் பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டாா்.
இதற்கிடையில், மேற்படி பசளைக்கான கட்டணம் செலுத்தப்படாத பட்சத்தில் இலங்கையின் அரச வங்கியொன்று சீனாவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமென சீன நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.