சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் சீனாவை சமாளிக்க அதன் அண்டை நாடாக உள்ள இந்தியாவை ட்ரம்ப் ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சீனாவை விட அதிகமாக இந்தியாவுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்துள்ளார். இதன்மூலம் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே தான் ட்ரம்பின் இந்த வரி விதிப்பை இந்தியா மீதான போராக வர்ணித்து அமெரிக்காவின் பிரபல ஊடகமான ‛தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் 25 சதவீத வரியை கடந்த 1 ஆம் திகதி விதித்தார். தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக நேற்று 2 ஆவது கட்டமாக 25 சதவீத விதித்தார் ட்ரம்ப். இதனால் இந்தியா மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக இன்று (ஆகஸ்ட் 7) முதல் 25 சதவீத வரி அமலுக்கு வருகிறது. அதன்பிறகு 21 நாட்கள் கழித்து 2 ஆவது கட்டமாக 25 சதவீத வரி செயல்பாட்டுக்கு வரும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நல்ல உறவு வைத்துள்ள நாடுகளில் இந்தியா ஒன்றாக உள்ளது.
குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – நரேந்திர மோடி இடையே நல்ல உறவு வந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து டிரம்ப் இப்படி 50 சதவீத வரி போட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பிரபல ஊடகமாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா மீதான போரை அமெரிக்கா தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.