Date:

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளது.

 

தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை 2:04 மணிக்கு 102 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், அட்டோக், டாக்ஸிலா, முர்ரி, சியால்கோட், குஜ்ரான்வாலா, குஜராத், ஷேக்குபுரா, ஃபெரோஸ்வாலா, முரிட்கே மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...