Date:

சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லவல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு, மீள் அறிவித்தல் வரை சுற்றுலாப்பயணிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும், அவரது இரண்டு பிள்ளைகளும், எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றபோது உயிரிழந்தனர்.

இவ்வாறாக அண்மைக் காலமாக, எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்தைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், எல்லவல நீர்வீழ்ச்சியைப் பார்வையிட, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாக வெல்லவாய பிரதேச செயலாளர் சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...