கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுத்த விசாரணையின் போது, சந்தேக நபரின் வீட்டில் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத பல கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன்படி, வெல்லம்பிட்டிய பகுதியில் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் 41 மற்றும் 64 வயதான சேதவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 18 கையடக்க தொலைபேசிகள், 02 மடிக்கணினிகள், 01 டேப்லெட் இயந்திரம், 01 பொலிஷர் இயந்திரம், 05 கிரைண்டர்கள் மற்றும் 03 கிரில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.