Date:

கினிகத்தேன விபத்தில் கொழும்பு பெண் பலி

கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆண் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையை சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் விபத்து இன்று (31) அதிகாலை 5:45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும் , சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இறந்த பெண்ணின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...