பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியலில் தீவிரமாக இருந்த காலம் முதல் பலஸ்தீன தேசத்தை ஆதரித்து வருகிறேன். பலஸ்தீன அரசை அங்கீகரிக்கக் கோரி தொடர்ந்து எனது குரலைப் பயன்படுத்தி வருகிறேன். இஸ்ரேலிய முற்றுகையால் பலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
கொடூரமான மற்றும் சகிக்க முடியாத வன்முறை சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம். பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்கள் இருவருக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கு மேலும் விரைவான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.