Date:

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...