Date:

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக்கு வழிவகுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி, இன்று காலை யட்டினுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் இரண்டு மாடி வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

வீட்டின் பின்புறம் கட்டப்பட்ட ஒரு தற்காலிக இடத்தில் பிரதேச சபை உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே நேரத்தில் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களில் உள்ள இரண்டு அறைகளில் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இருப்பினும், மனைவி மற்றும் மகளின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், முதல்நாள் இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு ஏதோ ஒரு வகையான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் கழுத்தை நெரித்து பிரதேச சபை உறுப்பினர் கொன்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேச சபை உறுப்பினரின் இளைய மகளுக்கு 12 வயது என்றும், சம்பவ தினத்திற்கு முன்தினம் கல்வி சுற்றுலாவிற்கு சென்று நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தந்தை சில மாத்திரைகளையும் சாப்பிடக் கொடுத்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அதிகாலையில் தன்னை கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்து எழுந்ததாகவும், தனது தந்தை கையில் கம்பியைப் பிடித்திருப்பதைக் கண்டதாகவும், அந்த நேரத்தில், தனது தந்தை தன்னை கட்டிப்பிடித்து அணைத்ததாகவும் இளைய மகள் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர் தனது தந்தை குளியலறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ள நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு, குறட்டை சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்றபோது, தனது தந்தை தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டதாகவும் சிறுமி கூறினார்.

மேலதிக விசாரணைகளின் போது, இறந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த எழுதியதாகக் கூறப்படும் 4 பக்கக் கடிதம் ஒன்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

“விஜேசிங்கே, உன்னை சபிக்கிறேன்..நீ எப்போதும் என்னைக் கொலை செய்வதாக மிரட்டி, வீட்டை விற்க முடியாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாய். ஒரு நாள் என் மகளின் பாடசாலைக்கு அருகில் வந்து மகளுடன் இருந்தபோது, என் காலரைப் பிடித்து வீட்டிற்கு வந்து கையெழுத்திடச் சொன்னான். நான் கையெழுத்திட முடியாது என்று சொன்னதும், அவன் என் தலையில் இரும்பினால் அடித்தான். என் நெற்றியில் அந்த வடு இன்னும் இருக்கிறது.”

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணையை கண்டி நீதவான் சாமர விக்ரமநாயக்க மேற்கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...