Date:

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு...

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...