பொரளையில் கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்உயிரிழந்ததாகவும், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரம் தூக்கி யின் பிரேக்குகள் சரியாக செயல்படாமையினால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.