Date:

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து வங்கியொன்றிலிருந்து 3.5 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கிலேயே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கியொன்றிலிருந்து பணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆவணத்தைத் தயாரித்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முறைகேடு செய்த குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் வாதியான எஸ்.டபிள்யூ.ஏ. காமினி விமலானானந்தாவுக்கு 400,000 ரூபா பண இழப்பீடு வழங்குமாறும், இழப்பீட்டை செலுத்தத் தவறினால் மேலும் பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்...

ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை…

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு  ஜுலை மாதம்...

வைத்தியர்களுக்கான இடமாற்றத்தில் சீர்கேடு; பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு!

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள்...

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...