ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருக்கும்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்