ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரச பாடசாலையில் காலை 8.30 மணியளவில் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.