கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் இன்று (24) மதுகம நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதற்கிடையில், இந்த சர்ச்சைக்குரிய ஜீப் ஒப்பந்தம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.