திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய பின்தொடர்பவரான நபர் ஒருவர் வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு-13, ஆதுருப்புத் வீதியைச் 45 வயதுடைய முகமது மிஹிலர் முகமது அர்ஷத் என்பவராவார்.
இவர், விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (22) அன்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை (24) அன்று இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.
அவர் 2017 ஆம் ஆண்டு நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு, மகந்துரே மதுஷ் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்கள் குழு துபாயில் ஒரு பிறந்தநாள் விழாவில் கைது செய்யப்பட்ட போது இவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களிடம் செல்லுபடியாகும் விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.