இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.
இதற்கு வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கி குடியரசின் தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன், இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அரச அதிகாரிகள், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.