ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டனர்.
முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம், இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. .
மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைகளில் மீட்பு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், விமானம் எரிவை கண்டுள்ளது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அதில் 6 பணியாளர்கள் இருந்தனர்.
விமானியின் பிழை மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.