தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.