இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன.
அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி இருந்தது.
Henley கடவுச்சீட்டு குறியீடானது, இந்த வருடத்தில் முன் விசா இல்லாமல் தங்கள் நாட்டு குடிமக்கள் எத்தனை இடங்களுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தி வருகிறது.
அதன்படி, உலகம் முழுவதும் 42 இடங்களுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத அணுகலைப் பெற முடியும்.
சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம், அதே நேரத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்கிறது.
இதேவேளை, குறியீட்டில் 8 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா, 85ஆவது இடத்திலிருந்து தற்போது 77ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை குறியீட்டில் கடைசி நான்கு இடங்களைப் பிடித்துள்ளன