பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN Awards 2025 நிகழ்வில், Roar of Glory என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் ஊழியர்களின் சிறப்பான சாதனைகளை கௌரவித்தது. Healthcare, Consumer Goods மற்றும் விவசாய வணிகம் ஆகிய அதன் முக்கிய வணிகத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு வணிகத் துறையும் தனித்தனியாக விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது. 2024/25 நிதியாண்டில் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தலைமைத்துவமும் வழங்கிய தனிநபர்கள் உட்பட குழுக்கள் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டன.
இந்த விருது வழங்கும் நிகழ்வுகளில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் மற்றும் சன்ஷைன் குழுமத்தின் நிறைவேற்றுக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் முதல் நாளில் பிரதம விருந்தினராக உப தலைவர் விஷ் கோவிந்தசாமி கலந்துகொண்டார். இந்த ஆண்டு மொத்தம் 215 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தகுதி விருதுகள் (Merit Awards), சிறப்பு விருதுகள் (Excellence Awards) மற்றும் மதிப்புமிக்க தலைவர் விருதுகள் (Chairman’s Awards) ஆகியவை அடங்கும். இவை தனிப்பட்ட சிறப்பையும், குழுக்களின் கூட்டு வெற்றியையும் எடுத்துக்காட்டின.
இதன்போது சன்ஷைன் குழுமம், 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய ஊழியர்கள் 65 பேருக்கு நீண்டகால சேவை விருதுகளை வழங்கியது. இது ஊழியர்களின் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்கான சன்ஷைனின் ஆழ்ந்த பாராட்டுக்களை பிரதிபலிக்கிறது. மேலும், SUN ஊழியர்களின் துடிப்பான உணர்வைக் கொண்டாடும் வகையில், குழுக்களிடையே நிலவும் நட்புறவு மற்றும் தனித்துவமான கலாசாரத்தை அங்கீகரிக்கும் வகையில், 13 வேடிக்கை விருதுகள் (Fun Awards) வழங்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்வுகளில் பேசிய குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் அவர்கள், இன்று இரவு, நாம் தனிப்பட்ட பாராட்டுகளை மாத்திரமன்றி, சன்ஷைனை வரையறுக்கும் கூட்டு பலத்தையும் கொண்டாடுகிறோம். இந்த நிறுவனம் 58 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த ஆண்டில் என்னுடன் நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று இரவு நாம் கௌரவிக்கும் இந்த வெற்றி, உங்கள் அற்புதமான பணியின் விளைவாகும்; உங்கள் மீள்திறன், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்பார்ப்புகளைத் தாண்டிச் செல்லும் உங்கள் உந்துதல் ஆகியவற்றின் பலனாகும். நாம் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, விடாமுயற்சி எம்மை வரையறுக்கும் மதிப்பாக இருக்க வேண்டும். தோளோடு தோள் நின்று, ஒவ்வொரு சவாலையும் ஒரே சிந்தனையுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதுவே நமது வெற்றியின் கர்ஜனை (roar of glory)! என்று கூறினார்.
ஊழியர்களின் திறமையை வெளிப்படுத்தும் இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளால் நிகழ்வுகள் மேலும் மெருகூட்டப்பட்டன. பணியிடத்திற்கு அப்பால் நிறுவனத்தை இயக்கும் பல்வேறு தனிப்பட்ட திறமைகளை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் (FY25), சன்ஷைன் ஹோல்டிங்ஸ் உறுதியான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025 நிதியாண்டிற்கான மொத்த ஒருங்கிணைந்த வருவாய் 59.3 பில்லியன் ரூபாவாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 7.0% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த சிறப்பான செயல்பாடு, குழுமத்தின் மொத்த வருவாயில் 55.0% பங்களிப்பு செய்த Healthcare துறையின் வலுவான இரு இலக்குகளின் வளர்ச்சியால் இயக்கப்பட்டது. Consumer மற்றும் விவசாயத் துறைகள் முறையே வருவாயில் 31.6% மற்றும் 13.4% பங்களித்தன. இதன் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் ஒரு சமநிலையான மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட கோப்புறையை பராமரித்து வருகிறது.
SUN Awards 2025, மக்கள், நோக்கம் மற்றும் செயல்திறனில் பெருமிதம் ஆகியவற்றை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இந்த நிகழ்வுகள் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மிகப்பெரிய சொத்து மக்கள், என்ற நம்பிக்கையை எதிரொலிக்கும் வகையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.