பாடசாலை மாணவர்களை, புதன்கிழமை (23) ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்து தங்காலை மற்றும் வீரகெட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து பெலியத்த-வீரகெட்டிய சாலையில் பெலிகல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.