Date:

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சியின் போது திறைசேரிக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மொத்தமாக 884 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடனைத் தீர்க்கவே ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடனின் அரைவாசி இப்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் செலுத்தப்பட்டதும், எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...