உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார். விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்.
விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.