ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பகுதியில் வைத்து பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.