Date:

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், திரு. ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் City of Dreams Sri Lanka-வின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திரு. கானை வரவேற்பதற்காக நீங்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்ததை எங்களாலும் நன்கு உணர முடிகிறது. அவரது ஆதரவுக்கும் நல்லெண்ணத்திற்கும் நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறோம், மேலும் எதிர்காலத்தில் திரு. கானை City of Dreams Sri Lankaவுக்கு வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஷாருக்கான் வருகை ரத்தாகியிருந்தாலும், City of Dreams Sri Lankaவின் ஆரம்ப விழா ஒரு முக்கிய கொண்டாட்டமாக திட்டமிட்டவாறு விமர்சையாக நடைபெறும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். அவர்களது விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். எனவே, உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு இடமாக இலங்கையை உலகளவில் அங்கீகரிக்கச் செய்வதற்கான முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வை மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். என கூறினார்.

Talent Agency நிறுவனமான WizCraft வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

திரு. ஷாருக்கான், அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட, எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால், City of Dreams Sri Lankaவின் ஆரம்ப நிகழ்வில் திட்டமிட்டபடி கலந்துகொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கையும் அதன் அற்புதமான மக்களும் திரு. ஷாருக்கான் மனதில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர், மேலும் இந்த ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர் உண்மையாகவே உற்சாகமாக இருந்தார். City of Dreams Sri Lanka நிர்வாகத்திற்கும், அவர்களின் அளவற்ற உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். எதிர்காலத்தில் திரு. ஷாருக்கான் இலங்கைக்கு விஜயம் செய்யும் வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை...